சிக்கலில் மணிரத்தினத்தின் பொன்னியின் செல்வன் – புதிய படத்துக்கு தயாராகும் இயக்குனர்

இயக்குனர் மணிரத்னம் தனது லட்சிய படமான ‘பொன்னியின் செல்வன்’ பட வேலைகளை கடந்த வருடம் தொடங்கினார். முதற்கட்டமாக தாய்லாந்து காடுகளில் முக்கிய காட்சிகள் படமாக்கப்பட்டன.

அதனையடுத்து சென்னையில் அரங்குகள் அமைத்து படப்பிடிப்பை மீண்டும் தொடங்க இருந்த நேரத்தில் கொரோனாவால் நிறுத்தப்பட்டது.

தற்போது ஊரடங்குக்கு பிறகு படப்பிடிப்புகளில் சமூக விலகலை கடைபிடிக்கவும் அதிகமானோரை படப்பிடிப்பில் பயன்படுத்துவதை தவிர்க்கவும் அரசு விதிமுறைகள் வகுக்கும் என்று தெரிவிக்கப்படுவதால், படப்பிடிப்பை தொடங்குவதில் சிக்கல் இருப்பதாக கூறப்படுகிறது. படத்தில் ஆயிரக்கணக்கான துணை நடிகர்களை வைத்து போர்க்கள காட்சிகளை படமாக்க வேண்டி உள்ளது என்றும் நடிகர்களின் நெருக்கமான காட்சிகளும் உள்ளது என்றும் படக்குழுவினர் தெரிவிக்கின்றனர்.

இதனால் கொரோனா முழுமையாக ஒழிந்தபிறகே பட வேலைகள் தொடங்கும் நிலை உண்டாகியுள்ளது..

எனவே இடைபட்ட காலத்தில் நடிகர் அரவிந்தசாமியை வைத்து புதிய படம் ஒன்றை இயக்க மணிரத்னம் திட்டமிட்டு இருப்பதாகவும் இதற்கான கதையை அவர் தயார் செய்து விட்டதாகவும் கோடம்ம்பாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

பொன்னியின் செல்வன் படத்தில் நடிகர் விக்ரம், கார்த்தி, சரத்குமார், ஜெயம் ரவி, பிரபு, ஜெயராம், ஐஸ்வர்யாராய், திரிஷா, ஐஸ்வர்யா லட்சுமி உள்ளிட்ட பலர் நடிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

Ponniyin Selvan

Ponniyin Selvan In Trouble

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *