சாப்பாட்டு விடுதி ஆரம்பிக்கப்போகும் சூப்பர் ஸ்டாரின் கதாநாயகி

இயக்குனர் ப ரஞ்சித் இயக்கத்தில் வெளிவந்த சூப்பர் ஸ்டாரின் கபாலி திரைப்படத்தின் நாயகி ராதிகா அப்டே, தமிழில் டோனி, வெற்றிச்செல்வன் போன்ற திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.

வெப் தொடர்களிலும் நடித்துவரும் ராதிகா அப்டே, தொடர்ந்து சர்ச்சைகளில் சிக்கிவரும் நடிகைகளில் ஒருவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் தனது திரைத்துறை செயற்பாடுகளை தவிர்த்து, உணவு விடுதி ஒன்றை அதிக ஆர்வம் காட்டிவருகிறார் ராதிகா அப்டே.

இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள ராதிகா அப்டே, கொரோனா கட்டுப்பாடுகள் தளர்ந்த பின் உணவு விடுதியை ஆரம்பிக்கவுள்ளதாக தெரிவித்துள்ளார்.

Radhika Apte

Radhika Apte Willing to start restaurant

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *