உச்சகட்ட காத்திருப்பில் ரஜினி ரசிகர்கள்

காலை 8.30 மணிக்கு வெளிவருகிறது ரஜினி 167

Latest Updates – 1st Look Released – Darbar

Early Updates

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், அரசியல் கட்சி ஆரம்பிக்கின்றாரோ இல்லையோ, வருடம் இரண்டு படங்களில் நடிப்பது கிட்டத்தட்ட நடந்துகொண்டே இருக்கிறது. கடந்த ஆண்டு ‘காலா’ மற்றும் ‘2.0’ ஆகிய திரைப்படங்கள் வெளியான நிலையில் இந்த ஆண்டு ஜனவரி 10ஆம் தேதி ‘பேட்ட’ வெளியானது

இந்த நிலையில் அவர் நடிக்கும் அடுத்த படமான ‘ரஜினி 167’ படத்தின் படப்பிடிப்பு நாளை முதல் தொடங்கவுள்ளது. இந்த படத்திற்கான போட்டோஷுட் ஏற்கனவே முடிந்துவிட்ட நிலையில் தற்போது இந்த படத்தின் ஃபர்ஸ்ட்லுக் இன்று காலை 8.30 மணிக்கு வெளியாகவிருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே ‘ரஜினி 167; திரைப்படத்தின் டைட்டில் என்ன என்பது இன்னும் சற்றுநேரத்தில் தெரிந்துவிடும் என்பதல் ரஜினி ரசிகர்கள் இப்போது முதலே கொண்டாட்டத்தில் உள்ளனர். இது அரசியல் விமர்சனங்களில் தாக்கத்தை செலுத்தலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

ரஜினிகாந்த், நயன்தாரா நடிக்கும் இத்திரைப்படத்திற்கு அனிருத் இசையமைக்கவுள்ளார். லைகா தயாரிப்பில் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் சந்தோஷ் சிவன் ஒளிப்பதிவில் உருவாகும் இத்திரைப்படம் இவ்வருட இறுதியில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.