இமயமலைக்கு புறப்பட்டார் ரஜினி

முருகதாஸ் இயக்கத்தில் உருவாகும் தர்பார் திரைப்படத்தின் தனது காட்சிகளை நடித்து முடித்துள்ள சூப்பர் ஸ்டார் ரஜினி, 10 நாள் ஆன்மிகப் பயணமாக இன்று இமயமலைக்கு புறப்பட்டு சென்றுள்ளார். அங்கு கேதார்நாத், பத்ரிநாத், பாபாஜி குகை ஆகிய இடங்களுக்கு சென்று தங்க திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

முழுக்க ஆன்மிக சுற்றுலாவாக அமையும் இப்பயணத்தில் கேதார் நாத், பத்ரிநாத் ஆகிய புனித தளங்கள், துவாரா ஹாட் குருசரண் ஆச்சிரமம், பாபாஜி குகை என்பனவற்றுக்கும் செல்லவும் திட்டமிட் டுள்ளார்.

இறுதியாக ‘காலா’, ‘2.0’ ஆகிய படங்களின் படப்பிடிப்பு வேலைகள் முடிந்ததும் இமயமலைக்கு சென்ற ரஜினி, தற்போது மீண்டும் சென்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

ரஜினிகாந்த் நடித்துள்ள ‘தர்பார்’ திரைப்படம், வரும் பொங்க லுக்கு ரிலீஸாக உள்ளமை குறிப்பிடத்தக்கது.

மேலும் இயக்குநர் சிவா, சன் பிக்சர்ஸ் கூட்டணியில் ரஜினியின் அடுத்த படமும் முடிவாகி, இதன் அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Latest Photos From Spot

Rajini On Himalayas Trip
Rajini On Himalayas Trip

Rajini On Himalayas Trip

Related Posts