நிர்வாண உடலை காய்கறிகள் கொண்டு மறைத்து பீட்டாவிற்கு விளம்பரம் செய்த ரகுல் ப்ரித்திசிங்

கார்த்தியுடன் தீரன் அதிகாரம் ஒன்று, மற்றும் தேவ், சூர்யாவுடன் NGK படங்களில் நடித்த ராகுல் ப்ரீத் சிங், தற்போது ஷங்கர் இயக்கத்தில் கமல் நடித்து வரும் இந்தியன் 2 திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருவதாக கூறப்படுகிறது.

சமூகவலைத்தளங்களில் தனது ரசிகர்களுடன் ஹாட்டான புகைப்படங்களை பகிர்ந்து வரும் ராகுல் ப்ரீத் சிங், சமீபத்தில் உலக சுற்றுச்சூழல் தினத்தையொட்டி பீட்டா இந்தியா என்ற அமைப்புக்கு ஆதரவளிக்கும் வகையில் ஒரு புகைப்படத்தை சமூக வலைதளத்தில் வெளியிட்டு உள்ளார். முழு நிர்வாணம் போல் இருக்கும் அந்த புகைப்படத்தை காய்கறிகள் வைத்து அவரது உடல் மறைக்கப்பட்டது போல இந்த புகைப்படம் உள்ளது.

அதில் ’விலங்குகளை சாப்பிடுவதை நிறுத்தி விட்டு முழுக்க முழுக்க சைவத்துக்கு மாறி இந்த உலகை காப்போம்’ என்று ரகுல் ப்ரீத்தி சிங் குறிப்பிட்டுள்ளார்.

இந்த புகைப்படத்திற்கு ரசிகர்கள் ஒருபுறம் பாராட்டுகளும் இன்னொருபுறம் விமர்சனமும் செய்து வருகின்றனர்.

Rakul Singh New Photoshoot

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *