விஜயவாடாவை விட்டு ஐதராபாத்திற்கு விரட்டப்பட்ட ராம்கோபால் வர்மா

தெலுங்குத் திரையுலகத்தில் சர்ச்சை இயக்குனர் ராம்கோபால் வர்மா எடுத்துள்ள ‘லட்சுமியின் என்டிஆர்’ படத்தை தடங்கல்களுக்கு பிறகு ஆந்திராவில் வரும் மே 1ம் தேதி வெளியிட உள்ளார்கள். அதற்காக நேற்று விஜயவாடாவில் ஒரு பத்திரிகையாளர் சந்திப்பை அவர் ஏற்பாடு செய்திருந்தார். ஆனால், அதை நடத்த முடியாத அளவிற்கு ஆந்திரா போலீஸ் கடும் கிடுக்கு பிடிகளை போட்டிருந்தனர்.

நேற்று, விஜயவாடா சென்ற ராம்கோபால் வர்மாவை போலீஸ் கஸ்டடியில் வைத்து, பின்னர் வலுக்கட்டாயமாக அவரை விஜயவாடாவை விட்டு ஐதராபாத்திற்கு அனுப்பி வைத்துள்ளனர். ஆந்திராவின் தற்போதைய முதல்வரான சந்திரபாபு நாயுடுவை ‘லட்சுமியின் என்டிஆர்’ படத்தில் ராம்கோபால் வர்மா வில்லனாக சித்தரித்திருக்கிறார். அதனால் படத்திற்கு ஆந்திராவில் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.

இதனிடையே, தன்னை அங்கிருந்து வெளியேற்றியதற்கு கடும் கண்டனங்களைத் தெரிவித்துள்ளார் ராம்கோபால் வர்மா. இந்த விவகாரம் தெலுங்குத் திரையுலகத்தில் தற்போது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related Posts