ரஜினி – ஏ.ஆர். முருகதாஸ் பட ஷூட்டிங் தள்ளிப்போக காரணம்??

Thalaivar 166

பேட்ட திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து, ரஜினி, இயக்குநர் ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் நடிக்கிறார்.
இந்தப் படத்தின் படப்பிடிப்பு இந்தமாதமே தொடங்குவதாகத் திட்டமிட்டிருந்த நிலையில் தள்ளிப்போயிருக்கிறது. தள்ளிப்போனதற்கான காரணம் குறித்த தகவல் தற்போது வெளிவந்திருக்கிறது.

லைகா புரொடக்‌ஷன்ஸ் தயாரிக்கும் இந்தப் படம், அரசியலை மையப்படுத்தி எடுக்கப்பட இருக்கிறது என்று கூறப்படும் நிலையில், திரைப்படத்துக்கு அனிருத்தே இசையமைக்க, சந்தோஷ் சிவன் ஒளிப்பதிவு செய்கிறார்.

படத்தில் ஹீரோயினாக நயன்தாரா நடிப்பற்கனா வாய்ப்புகள் அதிகம் என கூறப்படும் நிலையில், . படத்தின் ப்ரீ புரடக்‌ஷன் பணிகளில் ஈடுபட்டுள்ள ஏ.ஆர்.முருகதாஸ், அந்த பணிகளை முடித்துள்ளதாக கூறப்படுகிறது..

அதன்படி படத்தின் முதல் படப்பிடிப்புகளை மும்பையில் தொடங்க இருக்கிறது படக்குழு. படத்தின் ஷூட்டிங் இம்மாத இறுதியிலேயே தொடங்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், ஏப்ரல் 10ல் தொடங்கும் அறிவிக்கப்பட்டுள்ளதால், தேர்தல் அறிவிக்கப்பட்டு நடத்தை விதிமுறைகள் அமலில் இருப்பதால், ஷூட்டிங்கிற்கான பணத்தைக் கொண்டுசெல்வதில் சிக்கல் ஏற்படலாம் என்று கருதியே படத்தின் ஷூட்டிங் தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

Related Posts