ரஜினியின் அரசியல் தர்பார் ஆரம்பம்???

சற்றுமுன் சூப்பர் ஸ்டார் ரஜினியின் புதிய பட “தர்பார்” அறிவிப்பு வெளிவந்துள்ளது.

முருகதாஸ் இயக்கத்தில் ரஜினி நடிக்கும் திரைப்படம் அரசியல் பேசும் படமாகவே இருக்கும் என பலராலும் எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அதனை நிரூபிக்கும் வகையில் வெளிவந்திருக்கிறது திரைப்படத்தின் தலைப்பு மற்றும் 1ஸ்ட் லுக்.

ரஜினியின் அரசியல் வருகை குறித்த எதிர்பார்ப்புகள் எகிறிவரும் நிலையில், ஃபர்ஸ்ட்லுக் அதை நிவர்த்தி செய்யும் விதமாக வெளிவந்திருக்கிறது என கூறலாம்.

“தர்பார்” தலைப்பு அரசியல் பேசுகிறது என்பதை தாண்டி, ஃபர்ஸ்ட்லுக் இன் பின்னால் மகுடமாக கோட்டை நிமிர்ந்து நிக்கிறது என்பது கவனிக்கத்தக்கது.

அது தவிர ஏற்கனவே சமூகவலைத்தளங்களில் கூறப்பட்டது போல் ரஜினி காவல்துறை அதிகாரியாகவும் வருகிறார் என்பதை உறுதிப்படுத்தும் விதமாக காவல் துறையினரின் தொப்பியும் அதில் உள்ளடக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

ஆக மொத்தத்தில் ரஜினி ரசிகர்களின் அரசியல் அபிலாசைகளுக்கு பெரும் தீனி போடும் திரைப்படமாக வெளிவரும் என்பது திண்ணம்.

எனினும் ரஜினியின் நிஜ தர்பார் என்று ஆரம்பமாகும் என்பதே ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்பு!!!