மீண்டும் ரோஜா – சர்ச்சைக்குரிய கதையில் வில்லியாக

இயக்குனர் சுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜுன் , ராஷ்மிகா மந்தனா நடிக்கும் படம் ‘புஷ்பா’. தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி ஆகிய 5 மொழிகளில் உருவாக உள்ள இப்படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்க உள்ளார்.

செம்மரக்கடத்தலை மையமாக வைத்து உருவாகும் இத்திரைப்படத்தில் அல்லு அர்ஜுன் லாரி ஓட்டுநராக நடிக்கிறார்.

இந்நிலையில், இத்திரைப்படத்தில் நடிகை ரோஜா வில்லியாக நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. 90-களில் முன்னணி நடிகையாக இருந்த ரோஜா, கடந்த சில ஆண்டுகளாக அரசியலில் கவனம் செலுத்தி வந்தநிலையில், இப்படத்தின் கதையை கேட்டதும் பிடித்துப்போனதால் உடனே நடிக்க சம்மதித்ததாக கூறப்படுகிறது.

Actress Roja

Roja Re entry

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *