ராணாவுடன் ஜோடிசேரும் சாய் பல்லவி!!!

பிரேமம் மூலம் பிரபலமடைந்த சாய் பல்லவி அடுத்து ராணாவுடன் ஒரு தெலுங்கு படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.

பிரேமம், களி போன்ற மலையாள வெற்றி படங்களை கொடுத்துவிட்டு, அங்கிருந்து தெலுங்கில் ஃபிடா, எம்.சி.ஏ, தியா, படி படி லேசே மனசு போன்ற சாப்ட் கேரக்டர் படங்களில் நடித்துவிட்டு, தமிழில் அராத்து ஆனந்தியாக மாரி 2 நடித்திருந்தார் சாய் பல்லவி.

இதனை தொடர்ந்து தற்போது தமிழில் சூர்யாவின் என்.ஜி.கே படத்தில் நடித்துள்ளார்.

இந்நிலையில் தற்போது அவர் ராணாவுக்கு ஜோடியாக நடிக்க தெலுங்கு படமொன்றில் ஒப்பந்தமாகியுள்ளார்.

சாய் பலல்வி இந்த படத்தில் நக்ஸலைட்டாக நடிக்கயுள்ளாராம். அதுவும் போலீஸை காதலிக்கும் நக்ஸலைட்டாக.

நடிகைகள் பிரியாமணி மற்றும் தபு ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு ஜூன் மாதத்தில் துவங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Related Posts