ராதா ரவிக்கு சமந்தாவின் கிண்டல் டுவீட்

என்ன நடக்க போகுதோ!!!

நடிகை நயன்தாரா குறித்து நடிகர் ராதாரவி சமீபத்தில் நடந்த ‘கொலையுதிர்க்காலம்’ படத்தின் விழாவில் சர்ச்சைக்குரிய வகையில் பேசிய நிலையில் திரையுலகினர்களும் அரசியல்வாதிகளும் அவருக்கு கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில் நடிகை சமந்தா தனடு டுவிட்டரில் நக்கலான ஒரு டுவீட்டை பதிவு செய்து ராதா ரவியை சீண்டியுள்ளார்.

அதில் “தான் செய்தது சரி என நிரூபிக்க போராடுகிறார் ராதாரவி! உங்களைப் பார்த்தா எனக்கு பாவமாக இருக்குது. உங்கள் ஆன்மா அமைதியைத் தேட விரும்புகிறேன். அதற்காக நயன்தாராவின் சூப்பர் ஹிட் படத்தின் டிக்கெட் அனுப்புகிறேன். மன அமைதிக்காக பாப்கார்னோடு மாத்திரையையும் சேர்த்து சாப்பிடுங்கள்’ என சமந்தா தனது டுவீட்டில் தெரிவித்துள்ளார்.

ஒட்டுமொத்த திரையுலகமும் நயன்தாராவுக்கு ஆதரவாக களமிறங்கியுள்ளதால் ராதாரவி தற்போது அடக்கி வாசிக்கிறார்.

கடந்த பல வருடங்களாக போதுமேடைகளில் அருவருக்கத்தக்க வகையிலும் பேசி வரும் ராதாரவி, இனியாவது திருந்துவாரா? சமந்தாவின் இந்த பதிவுக்கு மீண்டும் வாய் திறப்பாரா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

ராதா ரவிக்கு சமந்தாவின் கிண்டல் டுவீட்

Related Posts