காதலித்து ஏமாற்றியதாக போக்கிரி பட ஒளிப்பதிவாளர் கைது

தன்னை காதலித்து ஏமாற்றியதாக நடிகை சாய் சுதா அளித்த புகாரின் பேரில், தெலுங்கில் மகேஷ்பாபு நடித்த போக்கிரி, பிசினஸ்மேன் உள்பட பல்வேறு படங்களில் ஒளிப்பதிவாளராக பணியாற்றிய ஷியாம் கே நாயுடு என்பவரை போலீசார் அதிரடியாக கைது செய்துள்ளனர்.

நடிகை சாய் சுதாவை கடந்த 7 வருடங்களாக காதலித்துவந்த ஷியாம் கே நாயுடு, நடிகை சாய் சுதாவிடம் திருமணம் செய்து கொள்வதாக வாக்குறுதி அளித்து நெருங்கி பழகி வந்தாராம். ஆனால் வாக்குறுதி கொடுத்தபடி திருமணம் செய்து கொள்ளாமல் டிமிக்கி கொடுத்துவந்த நிலையில், உஷாரடைந்த நடிகை, ஷியாம் தன்னை ஏமாற்றியதாக போலீசில் புகார் அளித்துள்ளார்.

இதையடுத்து விசாரணை நடத்திய போலீசார், ஷியாம் கே நாயுடுவை கைது செய்தனர். அவரிடம் தொடர் விசாரணை நடத்தி வருகின்றனர். ஒளிப்பதிவாளர் ஷியாம் கே நாயுடு ஏற்கனவே போதைப்பொருள் வழக்கில் பரபரப்பாகப் பேசப்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Shyam K Naidu Arrested By Police

Shyam K Naidu Arrested By Police

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *