சிம்பு படம் இழுபறியில்

தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி மறுப்பு

வந்தா ராஜாவாதான் வருவேன் படத்தை தொடர்ந்து சிம்பு நடிக்க இருக்கும் புதிய படம் ‘மாநாடு’ டிராப்பானதாக வந்த தகவலுக்கு தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி மறுப்பு தெரிவித்துள்ளார்.

இப்படத்தில் சிம்புவுடன் ஜெய் நடிக்க இருப்பதாகவும், ஜோடியாக ராஷி கண்ணா நடிக்க ஒப்பந்தம் ஆகியிருப்பதாகவும் செய்திகள் வெளிவந்தது.

சிம்பு பிறந்தநாளை முன்னிட்டு படப்பிடிப்பு தொடங்கும் என்று எதிர்பார்க்கப்பட்டநிலையில், குறிப்பிட்ட நாளில் படப்பிடிப்பு தொடங்காததால் படம் கைவிடப்பட்டதாக தகவல் வெளியானது.

இதற்கு தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி மறுப்பு தெரிவித்துள்ளார். ‘படம் கைவிடப்பட்டதாக வரும் வதந்திகளை நிறுத்துங்கள். ஒரு படத்தை தொடங்குவது அவ்வளவு சுலபமானது அல்ல. தற்போது படத்தின் முன்னணி வேலைகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. விரைவில் இப்படத்தின் முழு விவரங்கள் பற்றிய அறிவிப்பு அதிகாரப்பூர்வமாக அறிவிப்போம்’ என்றார்.

இருந்தும் படம் தொடங்குவதில் பல இழுபறிகள் இடம்பெற்றுவருவதாக கோடம்பாக்க செய்திகள் தெரிவிக்கின்றன.