மாநாடு படத்தில் நடிப்பதற்காக ஒல்லியான சிம்பு

அடுத்து வெங்கட் பிரபு இயக்கத்தில் மாநாடு திரைப்படத்தில் நடிப்பதற்காக தனது உடல் எடையை குறைத்து வந்த சிம்புவின் தோற்றம் குறளரசன் திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் வெளியாகி இருக்கிறது.

சிம்புவின் தம்பி குறளரசனின் திருமணம், கடந்த 26ந்தேதி சென்னை அண்ணா நகரில் உள்ள மணமகள் இல்லத்தில் நடைபெற்றது.

இவர்களது திருமண வரவேற்பு நேற்று மாலை நட்சத்திர ஓட்டல் ஒன்றில் நடந்தது. இதில் திரையுலக பிரபலங்கள் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினார்கள்.

உடல் எடையை குறைப்பதற்காக லண்டனுக்கு சென்ற நடிகர் சிம்பு, தன் தம்பியின் திருமணம் மற்றும் வரவேற்பில் நேற்று கலந்து கொண்டுள்ளார். சிம்பு அடுத்ததாக வெங்கட் பிரபு இயக்கத்தில் மாநாடு படத்தில் நடிக்க இருக்கிறார். அந்த படத்திற்காக தனது உடலை குறைத்து வந்தார்.

Maanaadu

இந்த நிலையில், குறளரசன் திருமண வரவேற்பில் கலந்து கொண்ட சிம்புவின் புகைப்படங்கள் சமூக வலைதளத்தில் வைரலாகி குறிப்பிடத்தக்கது.

Related Posts