விரைவில் சிம்புவுக்கு டும் டும் டும்

தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக இருக்கும் சிம்பு, விரைவில் திருமணம் செய்ய உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

சிம்புவுக்கு கடந்த சில ஆண்டுகளாக திருமண பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. பல வருடங்களாக தொடர்கதையாகவிருந்த இவ் நிகழ்வினால் ரசிகர்களுக்கும் மிகப்பெரிய வருத்தமாக இருந்தது. சிம்புவுக்கு எப்போது திருமணம் நடக்கும்? என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் நாளுக்கு நாள் அதிகமாகிக் கொண்டே போனது.

சிம்புவின் குடும்பத்தினரும், ரசிகர்களும் மகிழும் வகையில், இப்போது அவருக்கு திருமணம் நிச்சயமாகி இருக்கிறது. சிம்புவுக்கு லண்டனில் வசிக்கும் தூரத்து உறவினரான ஒரு பெண்ணுடன் திருமணம் பேசி முடிக்கப்பட்டுள்ளது. கோடீஸ்வர குடும்பத்தை சேர்ந்த மணப்பெண்ணுக்கு சொந்தமாக லண்டனில் சில கல்லூரிகள் உள்ளன. கொரோனா பிரச்சினைகள் முடிந்ததும் சிம்புவுக்கு திருமணம் நடைபெறும் என்று சிம்புக்கு நெருங்கிய வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

Simbu

Simbu wedding details

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *