ஸ்ரீரெட்டியின் “ரெட்டி டயரி”!!!

உருவாகிறது வரலாற்று படம்!

எல்லாம் காலக்கொடுமை…..

சினிமா உலகில் பிரபலங்கள் மீது பாலியல் புகார்களை கூறி பிரபலமானவர் ஸ்ரீரெட்டி. தற்போது சென்னையில் வளசரவாக்கத்தில் தங்கியிருக்கும் இவர், சிறிது காலம் அமைதியாக இருந்தவர், பைனான்சியர் சுப்புரமணியன் அடியாட்களுடன் வந்து தன்னை தாக்கியதாக மனித உரிமை ஆணையத்தில் மனு அளித்து மீண்டும் சர்ச்சையை கிளப்பியுள்ளார்.

இந்நிலையில் இவரது வாழ்க்கை வரலாறு “ரெட்டி டயரி” என்ற பெயரில் படமாக்க இருக்கிறார்களாம்.

ஸ்ரீரெட்டியே கதாநாயகியாக நடிக்கும் இப்படத்தை ரவிதேவன் என்பவர் தமிழ், தெலுங்கு என இரு மொழிகளிலும் இயக்குகிறார்.

ஸ்ரீரெட்டியின் வாழ்க்கை வரலாறு என்பதால் அவருடன் தொடர்பில் இருந்த நடிகர்கள், இயக்குனர்கள், தயாரிப்பாளர்கள் கடும் கலக்கம் அடைந்துள்ளனர். இதனால் இவர்கள் தனது படத்தை தடுக்க முயற்சிப்பதாக ஸ்ரீரெட்டி குற்றஞ்சாட்டியுள்ளார்.