சிம்புவுக்கு ஜோடியாகும் பிரபல இயக்குனரின் மகள்

வெங்கட் பிரபு இயக்கத்தில் சிம்பு நடிப்பில் உருவாகும் மாநாடு படத்தில் கதாநாயகி யார் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

வந்தா ராஜாவாதான் வருவேன் படத்தை தொடர்ந்து சிம்பு அடுத்ததாக ‘மாநாடு’ படத்தில் நடிக்க , சிம்புவுக்கு ஜோடியாக ராஷி கண்ணா நடிக்க இருப்பதாக முன்னர் செய்திகள் வெளியானது.

ஆனால், தற்போது இப்படத்தில் பிரபல இயக்குனர் பிரியதர்ஷனின் மகள், கல்யாணி பிரியதர்ஷன் கதாநாயகியாக நடிக்க ஒப்பந்தம் ஆகியிருக்கிறார். இதை இப்படத்தின் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி அதிகாரப்பூர்வமாக இன்று அறிவித்திருக்கிறார்.

சிம்புவுக்கு ஜோடியாகும் பிரபல இயக்குனரின் மகள்

Related Posts