பெரும் வெற்றியை எதிர்பார்த்து சூர்யா சிறப்பு பிரார்த்தனை

‘தானா சேர்ந்த கூட்டம்‘ திரைப்படத்தை தொடர்ந்து ‘என்.ஜி.கே’, ‘காப்பான்’ ஆகிய திரைப்படங்கள் வெளிவர இருக்கும் நிலையில், அடுத்து இறுதிச்சுற்று சுதா இயக்கத்தில் சூர்யா நடிக்க இருக்கும் சூர்யா 38 திரைப்படம் தொடங்குவதையொட்டி அஜ்மீர் தர்காவில் சிறப்பு பிரார்த்தனை செய்துள்ளார்.

Suriya 38

இத்திரைப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைக்க இருக்கும் நிலையில், இயக்குநர் சுதாவுடன் அஜ்மீர் தர்காவுக்கு சென்றிருக்கிறார் சூர்யா. தன்னுடைய நண்பரும் 2டி நிறுவன நிர்வாகியுமான ராஜசேகரன் கற்பூரபாண்டியனையும் உடன் அழைத்துச் சென்றிருக்கிறார். பிரார்த்தனையின் போது இவர்கள் எடுத்துக்கொண்ட புகைப்படம் தற்போது இணையத்தில் வெளியாகி ட்ரெண்ட் ஆகி வருகிறது.