சிவப்பழகை ஊக்குவிக்கும் விளம்பரங்களில் நடிப்பதை நிறுத்தி விட்டு நிறவெறிக்கு எதிராக குரல் கொடுங்கள் – தமன்னாவை சாடும் ரசிகர்கள்

உலகாவில் நிறவெறிகளுக்கு எதிராக போராட்டங்கள் தீவிரமடைந்துள்ள நிலையில், அமெரிக்க போராட்டத்துக்கு ஆதரவு அளிக்கும் வகையில் இந்திய திரை பிரபலங்கள் பலர் சமூகவலைத்தளங்களில் பதிவுகளை வெளியிட்டு வருகின்றனர்.

இந்நிலையில் நடிகை தமன்னா, தனது முகத்தில் கரியை பூசிக்கொண்ட புகைப்படம் ஒன்றை சமூக வலைத்தளத்தில் பதிவிட்டு உள்ளார். கர்ப்பிணி யானை, கறுப்பின இளைஞர் கொலைகளை கண்டிக்கும் வகையில் இந்த புகைப்படத்தை அவர் பதிவிட்டிருப்பதாக கூறப்படுகிறது.

இதனை தொடர்ந்து தமன்னாவின் இந்த பதிவுக்கு கடுமையான விமர்சனங்களும் கிளம்பியுள்ளன. சிவப்பழகை ஊக்குவிக்கும் விளம்பரங்களில் நடிப்பதை நிறுத்தி விட்டு நிறவெறிக்கு எதிராக குரல் கொடுங்கள் என்று ரசிகர்கள் பலர் தமன்னாவை கண்டித்துவருகின்றனர்.

சமீபத்தில் பாலிவுட் நடிகை கங்கணா ரணாவத் , இந்திய பிரபலங்கள் சிவப்பு நிறத்தை ஊக்கப்படுத்தும் விளம்பரங்களில் நடித்துக் கொண்டு வெட்கமே இல்லாமல் அமெரிக்க போராட்டத்திற்கு குரல் கொடுக்கிறார்கள் என்று கடுமையாக விமர்சித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Tamannaah On Lives matter

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *