நடிகைகளை தேர்வு செய்யும் போது திறமையை வைத்து தேர்வு செய்வதில்லை – Pa Ranjith

பா.ரஞ்சித்

இன்றைய தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனர்களில் ஒருவர் இயக்குனர் பா.ரஞ்சித், இவர் படங்களை இயக்குவது மட்டுமில்லாமல் தயாரிக்கவும் செய்கிறார். tamil cinema

சினிமாவை குறித்தும் அரசியலை குறித்தும் பல கருத்துக்களை நேர்பட பேசிவரும் பா.ரஞ்சித் மகளிர் தின நிகழ்வில் கலந்துகொண்டு பேசிய பேச்சு சமூகவலைத்தளங்களில் ட்ரெண்ட் ஆகிவருகிறது.

இதில், தமிழ்சினிமாவில் கதாநாயகிகளை, போகப்பொருளாகவும் சந்தையாகவும்தான் பார்க்கின்றனர். இந்த நிலை மாறவேண்டும் என்று கூறினார்.
மேலும் ஒரு திரைப்படத்திற்கு நடிகைகளை தேர்வு செய்யும் போது, அவர் நல்ல நடிகையா, சிறப்பாக நடிப்பாரா என அவருடைய திறமையை பார்த்து தேர்வு செய்யாமல், உடல் அமைப்பு மற்றும் அழகு இருக்கிறதா? என பார்த்து தேர்வு செய்கின்றனர் எனவும் கூறியுள்ளார்.

KeyWords : tamil cinema