‘தலைவன் இருக்கின்றான்’ படம் குறித்த புதிய அறிவிப்பு இதோ….

கமல், விஜய் சேதுபதி, வைகை புயல் வடிவேலு நடிப்பில் விரைவில் உருவாக்கவுள்ள திரைப்படம் “தலைவன் இருக்கின்றான்”. படத்துக்கு இசை ஏ.ஆர்.ரகுமான்.

மேலும் இத்திரைப்படம் நடிகர் திலகம் சிவாஜி கணேசன், கமல்ஹாசன் நடித்த ’தேவர் மகன்’ படத்தின் இரண்டாம் பாகம் என்றும் கூறப்படுகிறது.

இந்த நிலையில் ‘தலைவன் இருக்கின்றான்’ படம் குறித்த முக்கிய தகவல்களை கமல்ஹாசன் மற்றும் இசையமைப்பாளர் ஏஆர் ரஹ்மான் ஆகியோர் ரசிகர்களிடையே ஜூன் 11 ஆம் தேதி மாலை 5 மணிக்கு இடம்பெறும் உரையாடல் மூலம் தெரிவிக்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த உரையாடல் சமூக வலைதளங்களில் நேரடியாக ஒளிபரப்படவுள்ளது. இதனால் கமல் மற்றும் ஏஆர் ரஹ்மான் ரசிகர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.

Thalaivan Irukkindran

Thalaivan Irukkindran Updates

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *