தளபதி 63 – ஷாருக்கான் பரவும் தகவல்கள்!!!

Thalapathy 63

இயக்குனர் அட்லி இயக்கத்தில் தளபதி விஜய் நடிப்பில் உருவாகி வரும் தளபதி 63 படத்தில் ஷாருக்கான் நடிப்பதாக தகவல் வெளியான நிலையில், தற்போது அவர் வில்லனாக நடிப்பதாக கூறப்படுகிறது. இந்த தகவல்கள் தற்போது சமூகவலைத்தளங்களில் ட்ரெண்ட் ஆகி வருகிறது.

இத்திரைப்படத்தில் விஜய் ஜோடியாக நயன்தாரா நடிக்க, கதிர், இந்துஜா, யோகி பாபு, விவேக், ஆனந்த்ராஜ், டேனியல் பாலாஜி, சாய் தீனா, ஞானசம்பந்தம் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கிறார்கள்.

இந்நிலையிலையே பாலிவுட் நடிகர் ஷாருக்கான் சிறப்பு தோற்றத்தில் நடிப்பதாக முன்னதாக தகவல் வெளியானது. பின்னர் மெர்சல் படத்தின் இந்தி ரீமேக்கில் ஷாருக்கான் நடிப்பதாக கூறப்பட்டது. பின்னர் ஐபிஎல் கிரிக்கெட் போட்டியின் போது அட்லி – ஷாருக்கான் இருவரும் ஒன்றாக அமர்ந்து பேசிக்கொண்ட புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகியது. இதன்மூலம் விஜய் படத்தில் ஷாருக்கான் நடிப்பாரா என்ற எதிர்பார்ப்பு மீண்டும் ரசிகர்கள் மத்தியில் உருவானது.

இந்த நிலையில், தளபதி 63 படத்தில் ஷாருக்கான் வில்லனாக நடிப்பதாக புதிய தகவல் ஒன்று சமூகவலைத்தளங்களில் பரவி வருகிறது. இந்த படத்தில் வில்லத்தனமான மற்றொரு கதாபாத்திரத்தில், கால்பந்து விளையாட்டுக் கழகம் ஒன்றின் தலைவராக ஜாக்கி ஷெராப் நடிக்கிறார் என்பது தெரிந்த்ததுவே.

ஷாருக்கான் சிறப்பு தோற்றத்தில் நடிப்பதாக இருந்தாலும் வில்லன் கதாபாத்திரத்தை ஏற்று நடிப்பாரா என்பது கேள்விக்குறியே????

Related Posts