பைக்கில் பின்தொடர்ந்து வந்த ரசிகர்களுக்கு தளபதி விடுத்த கோரிக்கை – Thalapathy 63

Thalapathy 63

தளபதி 63 இன் படப்பிடிப்பு முடிந்து விஜய் வீட்டிற்கு செல்லும் வழியில், அவரை பின் தொடர்ந்து வந்த ரசிகர்களுக்கு விஜய் அட்வைஸ் கூறியிருக்கிறார்.

சென்னையில் 2 மாதமாக பல்வேறு பகுதிகளில் தளபதி 63 இன் வருகின்றன. தினமும் விஜய்யை காண படப்பிடிப்பு நடக்கும் இடங்களில் ஏராளமான ரசிகர்கள் கூடுகிறார்கள். அண்மையில் மீனம்பாக்கத்தில் உள்ள பின்னி மில்லில் நடந்த படப்பிடிப்பின் போது வெளியே ஆயிரக்கணக்கில் ரசிகர்கள் திரண்டனர்.

படப்பிடிப்பை முடித்து விட்டு புறப்படும் போது ரசிகர்களை பார்த்து விஜய் கையசைப்பதும் பதிலுக்கு அவர்கள் ஆரவாரம் செய்வதும் தினமும் நடந்து வருகிறது.

அதன்பிறகு காட்டாங்கொளத்தூரில் உள்ள பல்கலைக்கழகத்தில் படப்பிடிப்பு நடந்தது. அங்கும் ரசிகர்கள் கூடினார்கள்.

படப்பிடிப்பை முடித்து விட்டு விஜய் காரில் வீட்டுக்கு புறப்பட்டபோது ஏராளமான ரசிகர்கள் மோட்டார் சைக்கிள் பின்தொடர்ந்து தலைவா தலைவா என்று குரல் எழுப்பியபடி சென்றநிலையில், அவர்களுக்கு ஏதாவது ஆகிவிடக்கூடாது என்று கார் கண்ணாடியை இறக்கி பின்தொடர்ந்து வரவேண்டாம், பத்திரமாக திரும்பி செல்லுங்கள் என்று கேட்டுக்கொண்டார்.

ரசிகர்களுக்கு அவர் அறிவுரை சொல்லும் அந்த வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.

Vijay Thalapthy63 தளபதி