12 மணி நேரத்தில் டப்பிங் பேசிமுடித்து பிரபல நடிகர் சாதனை

’தீர்ப்புகள் விற்கப்படும்’ படத்தின் படப்பிடிப்புகள் நிறைவு பெற்று படத்தின் டீஸர் விரைவில் வெளிவரவிருக்கிறது.

இயக்குனர் தீரன் இயக்கத்தில் உருவாகும் இத்திரைப்படத்தில் முக்கிய வேடத்தில் நடிகர் சத்யராஜ் நடித்துள்ளார்.

இந்நிலையில் படம் ஒன்றுக்கு டப்பிங் பேச ஹீரோக்கள் பொதுவாக நான்கு நாட்கள் முதல் ஒருவாரம் வரை நேரம் எடுத்துக்கொள்ளும் நிலையில், வெறும் 12 மணி நேரம் மட்டும் எடுத்து டப்பிங் பேசி முடித்துள்ளார் நடிகர் சத்தியராஜ்.

இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள இயக்குனர் தீரன் “சத்யராஜூடன் இணைந்து பணியாற்றியது எனக்கு சினிமா மீது தீர்க்க முடியாத வேட்கையை ஏற்படுத்தியிருக்கிறது. அவருடன் பணியாற்றி முடித்ததும் அவரது கடின உழைப்புக்கும், அர்பணிப்பு மிக்க நடிப்புக்கும் நான் தீவிர ரசிகனாகி விட்டேன். சத்யராஜ் சார் தனது டப்பிங் பணிகளை 12 மணி நேரத்தில் முடித்து எங்களை ஆச்சரியப்படுத்தியிருக்கிறார். வெகு விரைவில் டீஸர் வெளியிடும் தேதியை அறிவிக்க இருக்கிறோம்’ எனவும் தெரிவித்துள்ளார்.

theerpugal virkapadum
theerpugal virkapadum

theerpugal virkapadum Movie Dubbing

Related Posts