பா ரஞ்சித் தயாரிக்கும் அடுத்த படத்தில் ஹீரோவாக நடிக்கும் முன்னணி நடிகர்

தமிழ் திரையுலகில் முன்னணி இயக்குனர்களில் ஒருவராக வலம் வரும் பா ரஞ்சித், தனது நீலம் புரோடக்சன் மூலமாக பரியேறும் பெருமாள், இரண்டாம் உலகப் போரின் கடைசி குண்டு ஆகிய படங்களை தயாரித்துள்ளார்.

இந்நிலையில் மீண்டும் அவரின் தயாரிப்பில் குழந்தைகள் சம்பந்தப்பட்ட படம் ஒன்று உருவாக இருக்கிறது. இப்படத்தில் நடிக்கும் மற்ற நடிகர்கள், நடிகைகள் தொழில்நுட்ப கலைஞர்கள் பற்றிய விவரங்கள் விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்க இருக்கிறார்கள்.

இந்நிலையில் இத்திரைப்படத்தில் கதாநாயகனாக முன்னணி நகைசுவை நடிகர் யோகிபாபு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாக கோடம்பாக்க செய்திகள் தெரிவிக்கின்றன.

தமிழ் சினிமாவில் முன்னணி நகைசுவை நடிகராக வலம் வரும் யோகி பாபு முதன்மை கதாபாத்திரத்தில் நடித்த கோலமாவு கோகிலா, கூர்கா போன்ற படங்களும் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றமை குறிப்பிடத்தக்கது.

Yogi Babu

Top Comedian In Pa Ranjith’s Next Movie

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *