சீக்கியராக மாறிய பக்‌ஷி ராஜன் அகஷ்ய குமார்

Akshay Kumar

சங்கர் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ஜானி நடிப்பில் வெளிவந்து வெற்றி பெற்ற திரைப்படம் 2.0. இத்திரைப்படத்தில் ரஜினிக்கு வில்லனாக 2.0 படத்தில் நடித்தவர் அகஷ்ய குமார். அவரின் பக்‌ஷி ராஜன் என்ற இவரின் கெட்டப் மிக பரவலாக பேசப்பட்டது.

பாலிவுட் சினிமாவின் முக்கிய நடிகரான இவர் அடுத்தடுத்து ஹிட் படங்களை கொடுத்து வரும் நிலையில் அண்மையில் தமிழ்நாட்டில் கோவை சுப்பிரமணியம் உருவாக்கிய மலிவு விலை நாப்கினை மையப்படுத்திய பேட் படத்தில் நடித்திருந்தார்.

அவரின் நடிப்பில் அடுத்ததாக கேசரி என்ற படம் மார்ச் 21 ல் வெளியாகவுள்ளது. இந்நிலையில் இத்திரைப்படத்தின் 1st Look வெளியாகிய நிலையில், அவரின் தோற்றத்தை கண்டு ரசிகர்கள் மிரண்டுள்ளனர்.

ஆளே அடையாளம் தெரியாத படி இருக்கும் இந்த கெட்டப் 122 வருடங்களுக்கு முன்னால் 21 சீக்கியர்கள் 10 ஆயிரம் ஆப்கானியர்களுக்கு எதிராக போர் புரிந்த கதையில் வருகிறதாம். இது தற்போது சமூகவலைத்தளங்களில் ட்ரெண்ட் ஆகி வருகிறது.