புதிய செய்திகள் தற்போது

Tamil Cinema News Net

கடும் குளிரையும் பொருட்படுத்தாது நடித்து கொடுத்த திரிஷா

Trisha Krishnan's Dedication

96, பேட்ட படங்களுக்கு பிறகு ராங்கி, பரமபத விளையாட்டு, பொன்னியின் செல்வன், சுகர் என பல படங்களில் நடித்து வரும் திரிஷா, ‘எங்கேயும் எப்போதும்’ சரவணன் இயக்கும் ‘ராங்கி’ திரைப்படத்திலும் நடிக்கிறார். இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு சில தினங்களுக்கு முன் நிறைவடைந்தது. இந்த படத்திற்கு ஏ.ஆர். முருகதாஸ் கதை வசனம் எழுதியிருக்கிறார்.

இந்த படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு உஸ்பெகிஸ்தான் நாட்டில் சமீபத்தில் நடைபெற்றதாகவும், அங்கு மைனஸ் 2 டிகிரி செல்சியஸ் குளிர் நிலவிவந்ததாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில் நடிகை திரிஷா கடும் குளிரையும் பொருட்படுத்தாமல், அதிகாலை படப்பிடிப்பு என்றால்கூட எதையும் பொருட்படுத்தாமல் படப்பிடிப்புக்கு முழு ஒத்துழைப்பு கொடுத்து நடித்துக்கொடுத்துள்ளாராம்.

Trisha Krishnan's Dedication

Trisha Krishnan’s Dedication