அருண் விஜய்யின் 6 வருட காத்திருப்பு வீண்போனது – OTT இல் ரிலீஸ் ஆகும் திரைப்படம்

நீண்ட திரைபோராட்டத்தின் பின் என்னை அறிந்தால் படத்தில் கிடைத்த வரவேற்புக்கு பிறகு அருண்விஜய் பல படங்களில் தன்னுடைய திறமையை நிரூபித்து வருகிறார்.

தடையறத் தாக்க, தடம், குற்றம் 23 போன்ற படங்கள் ரசிகர்களிடையே மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. அதனைத் தொடர்ந்து எதிர்ப்பார்க்கப்ட்ட திரைப்படங்களில் ஒன்று ‘வா டீல்’.

இயக்குனர் சிவஞானம் இயக்கத்தில் 2014 ஆம் ஆண்டு உருவான அதிரடி ஆக்ஷன் திரைப்படமான ‘வா டீல்’ இதுவரை வெளியாகமலையே கிடப்பில் இருந்துவந்துள்ளது.

இந்நிலையில் இத்திரைப்படத்தை ஜேஎஸ்கே நிறுவனம் OTTயில் ரிலீஸ் செய்வதாக அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளனர்.

பெரிதும் நம்பியிருந்த இத்திரைப்படம் பெரிய திரையில் வெளியாகாமல் இணையதளத்தில் நேரடியாக வெளியாவதால் பெரிதும் கவலையில் இருக்கிறாராம் அருண் விஜய்.

மேலும் ஆகஸ்ட் 15ஆம் தேதி இத்திரைப்படம் வெளியாகலாம் என தெரிவிக்கப்படுகிறது.

Vaa Deal Also On OTT

Vaa Deal Also On OTT

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *