சிம்புவுக்காக காத்திருக்க முடியாது, பிரபல நடிகருடன் கைகோர்க்கும் வெங்கட் பிரபு?

சுரேஷ் காமாட்சி தயாரிப்பில் சிம்புவை வைத்து மாநாடு திரைப்படத்தை தொடங்கினார் இயக்குனர் வெங்கட் பிரபு. ஆனால் சிம்புவின் பொறுப்பற்ற தனத்தினால் பெரும் இழுபறியில் சென்று மீண்டும் படத்தின் படப்பிடிப்புகள் தொடங்கவுள்ளது. இந்நிலையில் சிம்பு ஐயப்பனுக்கு மாலை போட்டுள்ளார்.

இதனால் மாநாடு படத்தில் நம்பிக்கையிழந்துள்ள இயக்குனர் வெங்கட் பிரபு, தனது அடுத்த படத்துக்காக நடிகரும் இயக்குனருமான ராகவா லாரன்ஸ் அவர்களை நேரில் சந்தித்து கலந்துரையாடியுள்ளதாக கூறப்படுகிறது.

ராகவா லாரன்ஸ் அவர்களை சந்தித்த புகைப்படத்தை தனது சமூகவலைத்தளத்தில் ரசிகர்களுடன் பகிர்ந்துள்ள வெங்கட் பிரபு ” நல்லதே நினைப்போம் , நல்லதே பேசுவோம், நல்லதே நடக்கும், அறிவிப்புகள் விரைவில்” என பதிவிட்டுள்ளார்.

Venkat Prabhu joins with polupar hero

Venkat Prabhu joins with polupar hero