ராதா ரவியின் பேச்சால் கோபப்பட்ட விக்னேஷ் சிவன்

அண்மையில் நடந்த நிகழ்வொன்றில் கலந்துகொண்ட ராதா ரவி நயன்தாரா பற்றி இரட்டை அர்த்தத்தில் பேசியிருந்தார்.

இது சர்ச்சையாகியுள்ள நிலையில், அதற்கு நயன்தாராவின் காதலர் விக்னேஷ் சிவன் கோபமாகி டிவிட்டரில் பதிலடி கொடுத்துளார்.

அதில் அவர் “இதனால் தான் சில நிகழ்ச்சிகளிலிருந்து விலகியே இருப்பது. அதில் தேவையில்லாமல் வேலையில்லாமல் இருக்கும் சிலருக்கு முக்கியத்துவம் கொடுத்து அவரை அர்த்தமில்லாமல் பேசவைப்பது. மேடையில் வாந்தி எடுக்கவைப்பது. இதெல்லாம் நடிகர் சங்கத்தில் கேட்க ஆள் இருக்காதே. அவர் மீது எந்த சங்கமும் நடவடிக்கை எடுக்க போவதில்லை” என விக்னேஷ் சிவன் கடுமையாக கூறியுள்ளார்.

ராதா ரவியின் பேச்சால் கோபப்பட்ட விக்னேஷ் சிவன்