பேரறிவாளன் விடுதலைக்கு மக்கள் செல்வன் ஆதரவு

இன்றுடன் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சம்பந்தப்பட்ட பேரறிவாளன் கைது செய்யப்பட்டு 30 ஆண்டுகள் நிறைவடைந்த நிலையில், #StandwithArputhamAmmal என்ற ஹாஷ்டேக் சமூகவலைத்தளங்களை ஆக்கிரமித்திருந்தது.

இந்நிலையில் மக்கள் செல்வன் விஜய்சேதுபதியும் தனது டிவிட்டர் பக்கத்தில் இன்று டிரெண்டாகி வரும் #StandwithArputhamAmmal என்ற புகைப்படத்தை ஷேர் செய்து தனது ஆதரவை தெரிவித்துள்ளார்.

இப்பொது மட்டுமின்றி கடந்த 2016ம் ஆண்டு தனியார் செய்தி நிறுவனத்துக்கு அளித்த செவ்வியில் “பேரறிவாளன் சிறையில் அடைபட்டுக் கிடந்து 25 ஆண்டுகள் ஆகி விட்டது. அவர் நிரபராதி என்று அவரை கைது செய்த போலீஸ் அதிகாரியே கூறிய பின்னரும், அவருக்கு கிடைக்க வேண்டிய நீதி ஏன் தாமதமாகிறது” நடிகர் விஜய்சேதுபதி தெரிவித்திருந்த வீடியோவும் சமூகவலைத்தளத்தில் வைரலாகியிருக்கிறது.

Vijay Sethupathi Also Support To Perarivalan Issue

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *