தொடர்ந்து ரசிகர்களை முட்டாள் ஆக்குகிறதா விஜய் டிவி

விஜய் டிவியின் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி தமிழகம் தாண்டி உலகம் முழுவதும் பல ரசிகர்களால் இன்னமும் பார்க்கப்படுகிறது. இந்நிலையில் சமீபத்தில் இந்த போட்டியின் இறுதிச்சுற்று நடந்தது.

இதில் வின்னராக ரித்திக் அறிவிக்கப்பட்டார், ஆனால் மக்களின் தீர்ப்பு இதுவா? என்பது தான் எல்லோரின் கேள்வியும்.

ஏனெனில் சூப்பர் சிங்கர் என்ற பெயரில் பல இணைய தளங்களில் கருத்துக்கணிப்பு நடத்தினார்கள்.

அந்த கருத்துக்கணிப்பு அனைத்திலும் பூவையார் தான் வெற்றி பெற்றார், அப்படி இருக்கையில் உங்கள் கருத்துக்கணிப்பில் மட்டும் எப்படி அவர் வெற்றி பெறவில்லை என மக்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர். அதிலும் அவருக்கு மூன்றாவது இடம் கொடுத்து உள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதே போல் கமலின் பிக் பாஸ் நிகழ்விலும் மக்களின் அபிப்பிராயங்களுக்கு மாறாக சில போட்டியாளர்களை வெளியேற்றியும், சிலரை காப்பாற்றியும் ரசிகர்களின் வெறுப்பை சம்பாதித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

இதுமட்டுமின்றி தமது நிகழ்ச்சிகளில் கமலுக்கு மறைமுக அரசியல் பிரச்சாரங்களை செய்துவருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.

https://twitter.com/azhagarsamy619/status/1119991677886746629