ரத்தம் படிந்த துப்பாக்கி கரம் – இன்னொரு கரம் பிடித்து நிறுத்துகிறதா? இல்லை தொடர வாங்கிக்கொள்கிறதா? – விக்ரம் 60

சியான் விக்ரம் நடிக்கவிருக்கும் 60வது படம் குறித்த அறிவிப்பு இன்று மாலை 5 மணிக்கு வெளியானது.

ஏற்கனவே நாம் முன்னர் தெரிவித்திருந்தபடி விக்ரமின் 60வது படத்தை இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்க உள்ளார். மேலும் முக்கிய வேடத்தில் விக்ரம் மகன் துருவ் விக்ரம் நடிக்க உள்ளார்.

கார்த்திக் சுப்புராஜின் படங்களில் பொதுவாக சந்தோஷ் நாராயணன் இசையமைத்து வந்த நிலையில், மீண்டும் பேட்ட திரைப்படத்தை தொடர்ந்து இந்த படத்தில் அனிருத் இசையமைக்கிறார்.

மேலும் இன்று வெளியாகியுள்ள இந்த படத்தின் போஸ்டரில் ரத்தம் படிந்த துப்பாக்கி ஏந்திய கரத்தை இன்னொரு கரம் பிடித்து இழுப்பது போன்று அமைக்கப்பட்டுள்ளது.

இதனால் வன்முறையில் ஈடுபடும் விக்ரமை, துருவ் விக்ரம் கரம் தடுத்து நிறுத்துகிறதா? இல்லை தனது போராட்ட வாழ்வினை விக்ரம் துருவ் விக்ரமனிடம் கொடுக்கிறரா என்பதே ரசிகர்களின் கேள்வியாகவுள்ளது.

Vikram 60 Updates

Vikram 60

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *