பிக் பாஸ் 3 தொகுத்து வழங்க போவது யாரு??

கமல்ஹாசன்

தமிழ் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் பிரபலமான பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது தொடருக்கான நாட்கள் நெருங்கி வரும் நிலையில், பிக் பாஸ் 3 இன் நிகழ்வுகளை தொகுத்து வழங்குவது யாரு என்கிற கேள்வி எழ தொடங்கியிருக்கிறது.

மிகவிரைவில் தமது திரையுலக பயணத்தை முடித்து கொள்வதாக அறிவித்த உலகநாயகன் கமல் முழுநேர அரசியல்வாதியாகிவிட்டார்.
இந்நிலையில் பிக் பாஸ் 3 நிகழ்வுகளை கமல் தொகுத்து வழங்குவாரா என்கிற சந்தேகம் ரசிகர்களிடம் எழுந்துள்ளது.

இந்நிலையில் தமது அரசியல் பயணத்தில் மிகப்பெரும் பிரச்சார ஊடகமாக பிக் பாஸ் 2 நிகழ்ச்சியை பயன்படுத்திய கமல், தொடர்ந்தும் பிக் பாஸ் நிகழ்வை தொகுத்து வழங்குவதன் மூலம் தனது அரசியல் பயணத்தில் அதனை மிகப்பெரும் ஆதரவு தளமாக பயன்படுத்துவார் என எதிர்வுகூறப்படுகிறது.

பிக் பாஸ் முதலாம் பாகத்தை போன்று இரண்டாம் பாகத்தில் கமல் நடுநிலையாக நடந்துகொள்ளவில்லை என்று பரவலாக குற்றம் சாட்டப்பட்ட நிலையில் , மீண்டும் கமல் மூன்றாம் பாகத்தை தொகுத்து வழங்கினால் மிதமிஞ்சிய அரசியல் வாடை வீசும் என எதிர்பார்க்கலாம். அதுமட்டுமின்றி மக்கள் மைய பிரபலங்களையும் நிகழ்வில் போட்டியாளர்களாக அதிகளவில் சேர்க்கலாம் என எதிர்பார்க்கலாம்.

குறிப்பாக நடிகை கோவை சரளாவும் நிகழ்வில் பங்குபற்றுவதக்காண சந்தர்ப்பங்கள் அதிகம் என எதிர்பார்க்கலாம்.