சிவகார்த்திகேயன் படத்தின் இசையமைக்கும் வேலைகளை தொடங்கிய யுவன்

SK 15

இப்போது பி.எஸ்.மித்ரன் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்க இருக்கும் எஸ்.கே.15 படத்திற்கு இசையமைக்கும் பணியை யுவன் சங்கர் ராஜா தொடங்கியிருக்கிறார்.

விரைவில் வெளிவர இருக்கும் `மிஸ்டர்.லோக்கல்’ படத்தை தொடர்ந்து சிவகார்த்திகேயன் தற்போது ரவிக்குமார் இயக்கத்தில் அறிவியல் சார்ந்த படம் ஒன்றில் நடித்து வருகிறார்.

இதட்க்கு அடுத்ததாக பி.எஸ்.மித்ரன் இயக்கத்தில் அரசியல் கலந்த திரில்லர் படத்தில் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளார் சிவகார்த்திகேயன்.

இத்திரைப்படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக கல்யாணி பிரியதர்ஷன், இவானா ஒப்பந்தமாகியிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் தற்போது இப்படத்தின் இசையமைக்கும் பணிகளை தொடங்கி இருக்கிறார் யுவன் சங்கர் ராஜா.
இதை தனது சமூக வலைத்தளத்தில் இயக்குனர் பி.எஸ்.மித்ரனுடன் இருக்கும் புகைப்படத்தை பதிவு செய்து உறுதிப்படுத்தியிருக்கிறார்.

இத்திரைப்படத்தை 24 ஏ.எம்.ஸ்டூடியோஸ் தயாரிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

Related Posts